JobVibe.lk - Sri Lanka Job Portal

குரக்கன்சேனையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் காயம்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கறபிட்டி பாலாவி பிரதான வீதியின் குரக்கஞ்சேனை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு இன்னுமொருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 


இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (13) நண்பகல் இடம்பெற்றுள்ளது இவ் விபத்து சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது கற்பிட்டியிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிள் குரக்கஞ்சேனை கிராமத்திலிருந்து பிரதான வீதிக்கு வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி உள்ளது இதன்போது இரு மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களும் பலத்த காயங்களுடன் கற்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றவர் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


உயிழந்தவர் 55 வயதையுடைய கற்பிட்டி ஆனைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் விபத்து சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال