JobVibe.lk - Sri Lanka Job Portal

காலியில் இடம்பெற்ற மத நல்லிணக்கம் தொடர்பான செயலமர்வு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு  (VOPP)  மலையக இந்து அறநெறி மற்றும் கத்தோலிக்க /கிறிஸ்தவ மறைப்பாடசாலை   மாணவர்களுக்கான மத நல்லிணக்கம் தொடர்பான செயலமர்வு ஒன்று கடந்த  சனிக்கிழமை (31) காலி  மாவட்டத்தில் நடைபெற்றது


காலி மாவட்ட தன்னார்வ செயற்பாட்டாளர் செல்வன் ஆர் கவிஷ்க பங்குபற்றுனர்களை வரவேற்று செயலமர்வை ஆரம்பித்து வைத்தார் 


தொடர்ந்து திருமதி. லவீனா ஹசந்தி, திட்ட இயக்குநர் - வொப் அமைப்பின் செயற்பாடுகளை தெளிவுப்படுத்தியதோடு நாளுக்கான நோக்கவுரையை நிகழ்த்தினார்.


பயிற்சியின் முக்கிய நோக்கம் மலையக இந்து மற்றும் கிறிஸ்துவர் மாணவர்களுக்கு இடையில் மத ஒற்றுமை வளர்த்தல் மற்றும் எதிர்கால சமூகத்தை பொறுப்பெடுக்கவிருக்கின்ற மாணவர்கள் கூட்டிணைந்து தமது மலையக சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான வழியை ஆயத்தப்படுத்துவதே இச்செயலமர்வின் நோக்கமாக காணப்பட்டது


 இச் செயலமர்வின் வளவாளர்களாக பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் நிர்வாக இயக்குநர் அன்டனி ஜேசுதாஸன்  மற்றும் திரு. ராஜேந்திரன், கா/ தலங்கா சரஸ்வதி  தமிழ் மகா வித்யாலய அதிபர் ஆகியோர் வளவாளர்களாக செயற்பட்டனர்.  மாணவர்கள் ஒற்றுமை மற்றும் அமைதியான வாழ்வியல் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல்கள் மற்றும் செயல்பாடுகளில் ஊக்குவிக்கப்பட்டனர்


மேற்படி செயலமர்வுக்கு அறநெறி பாடசாலை மற்றும் மறைப்பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال