JobVibe.lk - Sri Lanka Job Portal

புழுதிவயல் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு

 (கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புழுதிவயல் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ.எம்.றிகாஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.


புழுதிவயல் கிராம உத்தியோகத்தர் அலுவலக முன்றலில் சுதந்திர தினத்தினை சிறப்பிக்கும் முகமாக மரக்கன்றுகளும் நடப்பட்டன. 


இந்நிகழ்வில் புழுதிவயல் பிரஜா சக்தி உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال