JobVibe.lk - Sri Lanka Job Portal

எழுத்தாளர் நூருல் ஹுதா உமர் உட்பட மேலும் இருவருக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி வைக்கப்பட்டது.


கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் மாவட்ட செயலகமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலைஞர்களுக்கு கலைஞர் சுவதம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் இன்று (03) காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு எஸ். சுதர்சனின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.


இந்த நிகழ்வில் இலக்கிய சேவைக்காக எழுத்தாளர் நூருல் ஹுதா உமர், இசை கலைஞர்களான சுதாகரன் லோவிகரன், லோககேசரம் லோஜினி ஆகிய மூன்று கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சுவதம் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.


மேலும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.ரிம்ஸான், காரைதீவு பிரதேச செயலக கணக்காளர் திருமதி றிம்ஸியா, அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


ஊடகங்களின் பிராந்திய செய்தியாளரான நூருல் ஹுதா உமர் 200க்கும் அதிகமான ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளதுடன் அண்மையில் விபரண கட்டுரைக்கான உபாலி விஜயவர்தன சிறப்பு விருதையும் பெற்றிருந்தவர் என்பதுடன் கவிஞர், அறிவிப்பாளர், கதையாசிரியர் என பன்முக ஆளுமை கொண்டவர் என்பது  குறிப்பிடத்தக்கது.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال