JobVibe.lk - Sri Lanka Job Portal

78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வு

இலங்கை தனது 78ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில், வெளிநாட்டு வாழ் புதுக்குடியிருப்பு சமூக அமைப்பான (PUTHUKKUDIRUPPU COMMUNITY IN ABROAD) அமைப்பின் ஏற்பாட்டில் மற்றும் Sakeena Stores உரிமையாளர் அல்ஹாஜ் A.B.M. ரஸ்மின் அவர்களின் முயற்சியாலும் புதுக்குடியிருப்பு பகுதிக்குற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் தேவையுடைய 248 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கரப்பத்தாட்ட மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்வில், வெளிநாட்டு வாழ் புதுக்குடியிருப்பு சமூகத்தின் நிர்வாக உறுப்பினர்கள், Puthukkudieruppu Educational Development Society (PEDS) நிர்வாகிகள், புதுக்குடியிருப்பு முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜிதின் தலைவர் அஷ்ஷெய்க் M.U.M. ஷரீக்(கபூரி), புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலய அதிபர் M.U.M. ஷாஜஹான், ஆராச்சிகட்டு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் S. நிஜாமுதீன் மற்றும் உலமாக்கள், ஆசிரியர்கள் மேலும் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு துணையாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் நோக்கத்துடனும் இத்தகைய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


புதுக்குடியிருப்பு

என். எம். ஹபீல் (கபூரி, JP)
























Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال