JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் நல்லாந்தழுவை மன்சூர் அகடமி ஏற்பாட்டில் இடம்பெற்ற 78ஆவது சுதந்திர தின நிகழ்வு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் நல்லாந்தழுவை மன்சூர் அகடமி ஏற்பாட்டில் இடம்பெற்ற 78ஆவது சுதந்திர தின நிகழ்வு அதன் ஸ்தாபக தலைவர் பீர் முஹம்மது மன்சூர்  தலைமையில் நல்லாந்தழுவை MPS ஆப்தீன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.  ஆப்தீன் எஹியா மற்றும் கௌரவ அதிதியாக கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். றினோஸ், விஷட அதிதிகளாக ஓய்வு பெற்ற  முன்னாள் அதிபர் என். எம். எம். நஜீப், மதுரங்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் எம். எல். எம். றிபாய்தீன், விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் ஏ. அபூ அஷ்ரப் மற்றும் சர்வ மதத்தலைவர்கள் ஆகியோர் கலந்து  சிறப்பித்தனர். 


மேற்படி நிகழ்வில் நல்லாந்தழுவை பாலர் பாடசாலைகளான,  அல் மதீனா மற்றும் அல் ஸபா மாணவர்கள்  கலந்து  சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





























































Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال