JobVibe.lk - Sri Lanka Job Portal

ஸ்ரீலங்கா பென் கிளப்பின் புதிய நிர்வாக சபை - 2026

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஆற்றலுள்ள முஸ்லிம் பெண்கள் அமைப்பின் (SRI LANKA PEN CLUB) - 2026 ஆம் ஆண்டிற்கான ஏழாவது நிர்வாக சபைத் தெரிவு யாப்பின்  ஸ்தாபகரும், தலைவியுமான இலக்கிய வித்தகர் கலாபூஷணம் சம்மாந்துறை மஷூறா சுஹூறுதீன் தலைமையில் இடம்பெற்றது. 


அதன் படி, உப தலைவர்களாக சாய்ந்தமருது ஜெஸீனா நிஸ்றீன், தம்பாலை ஜூவைரியா சதீக் ஆகியோரும், பொதுச் செயலாளராக மூதூர் சுஸானா முனாஸ், இணைச் செயலாளராக மருதமுனை டாக்டர் பர்வீன் அப்துல் காதர், உப செயலாளராக காத்தான்குடி பௌஸியா றிஸான் ஆகியோரும், பொருளாளராக அக்கரைப்பற்று முபீதா அமீன், கணக்காய்வாளராக கலேவல லரீபா பதுர்தீன், பொது இணைப்பாளர்களாக திருகோணமலை மர்ளியா சக்காப், கடுகஸ்தோட்டை ஷாமென் நிஸாம்டீன் ஆகியோரும், ஊடக இணைப்பாளர்களாக மாவனெல்லை பாரா தாஹிர், அக்கரைப்பற்று  றம்ஸானா ஸமீல் ஆகியோரும்,


நிர்வாக உறுப்பினர்களாக ஹுனுப்பிட்டிய எஸ்.யூ. கமர்ஜான் பீபீ, கொழும்பு வஃபீரா வஃபீ, கண்டி சில்மியா சாப்தீன், ஓட்டமாவடி ஹகீமா அமீனுதீன், சம்மாந்துறை நௌஷா ஜமால்தீன், நாச்சியாதீவு ஹிஃப்ரா பாஃரூக், நேகம எம்.ஆர். ரபீஉல் பஸ்ரானா, மதவாச்சி எஸ்.எம்.பெனாஸிரா, ஹப்புத்தளை ஜெஸ்மின் யூஸுப் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர் என்பதை அமைப்பின் தலைவி கலாபூஷணம் மஷூறா சுஹூறுத்தீன் உத்தியோகபூர்வமாக நேற்று அறிவித்துள்ளார்.


அமைப்பில் புதிய உறுப்பினர்களாக இணைந்து கொள்ள விரும்பும் ஆற்றலுள்ள முஸ்லிம் பெண்கள்,(நிபந்தனைகளுக்கேற்ப) உள்வாங்கப்பட இருப்பதால், இணைய விரும்புவர்கள்  தலைவியின் (077 069 6559) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள முடியும் என்பதை அறியத் தருகின்றார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال