JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம், சாலியவெவ பகுதியில் 02 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

இலங்கை கடற்படை, மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (22)புத்தளம் சாலியவெவ பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சுமார் இரண்டு (02) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சா, ஒரு (01) சந்தேக நபர் மற்றும் ஒரு (01) மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.


அதன்படி, புத்தளம் சாலியவெவ பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையின், பண்டுகாபய நிறுவனம் மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டை சோதனையிட்டனர். அங்கு, வீட்டில் இருந்த ஒரு நபர் (01) சுமார் இரண்டு (02) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் (01) ஒன்றுடன் கைது செய்யப்பட்டார்.


மேலும், இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம், சாலியவெவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், சந்தேக நபர், வெளிநாட்டு கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சாலியவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال