JobVibe.lk - Sri Lanka Job Portal

நுரைச்சோலை வீட்டு திட்டம்; நீதிமன்ற தீர்ப்பின்படி பகிர்ந்தளிக்க நடவடிக்கையா? DCC கூட்டத்தில் நிசாம் காரியப்பர், அதாஉல்லா போர்க்கொடி..!

நுரைச்சோலை வீட்டு திட்டம் தொடர்பான விடயம் இன்று அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது பாரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


முக்கியமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வீடுகளை வழங்குவதற்கு ஆரம்பக் கட்டம் வேலை தொடங்க முடியும் என்று அதன் DCC தவிசாளரான பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவித்ததை அடுத்தே இந்த வாக்குவாதங்கள் எழுந்துள்ளன.


பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர முதல்வரான முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கருத்துகளை முன்வைத்தனர்.


"நுரைச்சோலை வீட்டு திட்டத்திற்கு தற்போதுள்ள ஒரே தீர்வு, பாராளுமன்றத்தில் ஒரு விசேட சட்டம் கொண்டு வருவதுதான். அந்த சட்டத்தின் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்டும் இதுவரை வீடு கிடைக்காத மக்களுக்கு முதன்மை வழங்கி, இந்த வீடுகளை ஒதுக்க வேண்டும்" என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் இதன்போது வலியுறுத்தினார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال