JobVibe.lk - Sri Lanka Job Portal

ஈரான் – அமெரிக்கா போர் நடைபெற்றால், அரபு மற்றும் மேற்கு நாடுகளின் நிலைப்பாடு எவ்வாறாக அமையும் ? அறிக்கைகளை நம்பலாமா ?

ஈரான் – அமெரிக்கா போர் பதட்டம் நிலவிவருகின்ற நிலையில், சில நாடுகள் அமெரிக்காவுக்கும், இன்னும் சில நாடுகள் ஈரானுக்கும் ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றது.  


அரசியலில் அறிக்கைகளை மாத்திரம் நம்புவது தவறு. அதனை ஆழமாக ஊடுருவி ஆராய வேண்டும்.   


கடந்த காலங்களில் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, யேமன் போன்ற பல நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது கண்ணை மூடிக்கொண்டு அரபு நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்கியது. ஆனால் தற்போது ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு தங்களது நாட்டை பயன்படுத்த கூடாதென்று அறிக்கை விடுத்துள்ளது.  


மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளுக்கு எதிரான போரில், அமெரிக்காவை அசைக்க முடியாதென்ற உறுதியான நம்பிக்கையினாலேயே அரபு நாடுகள் ஆதரவு வழங்கியது.


ஆனால் ஈரான் – அமெரிக்கா போர் நடைபெற்றால், அமெரிக்கா வெற்றியடையும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. தோல்வியடையலாம் என்ற எதிர்பார்ப்பினாலேயே அமெரிக்காவை நேரடியாக ஆதரிக்க அரபு நாடுகள் தயங்குகின்றது. 


அவ்வாறு ஆதரவு வழங்கினால், அங்குள்ள அமெரிக்க தளங்களை மட்டுமல்ல, தங்களது நாடுகளையும் ஈரான் தாக்கும் என்ற அச்சம் அரபு நாடுகளுக்கு உள்ளதனாலேயே ஈரானுக்கு எதிராக வெளிப்படையாக செயற்படுவதற்கு அரபு நாடுகள் தயங்குகிறது. 


மறுபுறத்தில், இதுவரைகாலமும் அமெரிக்காவின் நட்பு நாடான டென்மார்க்கின் கீழுள்ள கிரீன்லாந்தை அமெரிக்கா எந்த நேரத்திலும் கைப்பற்றலாம், அமெரிக்காவின் 51 வது மாநிலமாக கனடாவை ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில், ஈரானுடனான போரில் அமெரிக்கா தோல்வியடைய வேண்டும் என்றுதான் இவ்விரு நாடுகள் விரும்பும். 


வெளிப்படையாக என்னதான் அறிக்கைகளை வெளியிட்டாலும், ஈரான் பிராந்திய வல்லரசாக வருவதனை அரபு நாடுகள் விரும்பாது, அதேநேரம் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதென்றால், அது ஈரானிடம் தோல்வியடைய வேண்டும் என்றுதான் அச்சுருத்தலை எதிர்கொள்கின்ற சில மேற்கு நாடுகளின் நிலைப்பாடாக இருக்கும். 


எனவே வெளிப்படையான அறிக்கைகளை மாத்திரம் கருத்தில் கொண்டு நாங்கள் எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது.


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال