JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஆனமடுவ கொட்டுக்கச்சி குளத்தில் பழுதடைந்த மதகை பழுது பார்த்த கடற்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் ஆனமடுவ கொட்டுக்கச்சி குளத்தில் நீண்ட நாட்களாக செயழிலந்திருந்த மதகை பழுது பார்த்து மீண்டும் செயல்படுத்தும்  நடவடிக்கையில் கடந்த  வியாழக்கிழமை (11) கடற்படை சுழியோடிகள் ஈடுபட்டனர் 


கொட்டுக்கச்சி குளத்தின் மதகை ஆய்வு செய்து தேவையான பழுதுபார்ப்பை மேற்கொள்வதற்கு புத்தளம் நீர்ப்பாசன துறை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கடற்படையின் சுழியோடிகளின் உதவியை நாடியதனை அடுத்து வடமேற்கு கடற்படை கட்டளையிலிருந்து சுழியோடிகள் குழு அனுப்பப்பட்டு மேற்படி மதகின் வாயிலில் அடைக்கப்பட்டிருந்த மணல், சேறு மற்றும் பாறைகளை அகற்றி மதகினை  மீண்டும் செயல்பட வைத்தமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال