JobVibe.lk - Sri Lanka Job Portal

முன்கூட்டியே அறிவித்தபின்புதான் ஈரான் தாக்குதல் நடாத்துவது ஏன் ?

அமெரிக்காவும், இஸ்ரேலும் திடீர் தாக்குதல் மூலம் எதிரிகளின் இலக்கை அழிக்கின்றனர். ஆனால் முன்கூட்டியே அறிவித்துவிட்டுத்தான் ஈரான் பதில் தாக்குதல் நடாத்தியது.  


ஈரானின் இந்த நடைமுறையை பலர் விமர்சிக்கின்றனர். ஆனால் ஈரானின் போரியல் நேர்மையையும், இராணுவ வல்லமையையும், வெளிப்படைத் தன்மையையும், இஸ்லாமிய வழிமுறையினையும் புரிந்துகொள்ளாமையே இதற்கு காரணமாகும்.   


ஈரானின் முன்கூட்டிய அறிவிப்பானது ரசூலுல்லாஹ்வின் போர் மரபை பின்பற்றும் ஒன்றாகும். ரசூலுல்லாஹ்வின் காலத்தில் முன்கூட்டி அறிவிப்பு செய்துவிட்டுத்தான் போரினை தொடங்குவார்கள். இது அரேபிய மரபு மட்டுமல்ல பண்டைய காலங்களில் பெரும்பாலும் இதுதான் நடைமுறை.  


இந்த நடைமுறையை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் ஈரான் தனது நீதி நெறிமுறையினை உலகிற்கு காண்பிக்க முயல்கிறது.  


அத்துடன் தீமைக்கு எதிராக போர் செய்யும்போது முன்னறிவிப்பு செய்வதன் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பினை தடுக்க முயல்கின்றனர்.    


2020 ஜனவரியில் காசிம் சுலைமானி கொலை, 2024 ஏப்ரலில் சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகம் தாக்கப்பட்டமை ஆகியவற்றுக்கு பதிலடி வழங்கமுன்பு முன்னறிவிப்பு செய்துவிட்டுத்தான் ஈரான் தாக்குதல் நடாத்தியது. 


எதிரியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தூங்கிக் கொண்டிருப்பவனின் கழுத்தை வெட்டுவது போன்று அமெரிக்காவும், இஸ்ரேலும் பின்பற்றுகின்ற திருட்டுத்தனமானதும், நேர்மையற்றதும், கோழைத்தனமானதுமான போரினை ஈரான் இஸ்லாமிய குடியரசு மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال