JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் அல்-அஷ்ரக் காற்பந்தாட்ட அணியினர் தற்காலிகமாக அனைத்து காற்பந்தாட்ட போட்டிகளில் இருந்தும் இடைநிறுத்தம்.லீக் தலைவர் முஹம்மது யமீன் அதிரடி அறிவிப்பு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் அல்-அஷ்ரக் காற்பந்தாட்ட அணியினர் தற்காலிகமாக அனைத்து காற்பந்தாட்ட போட்டிகளில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக லீக்கின் தலைவர் முஹம்மது யமீன் தெரிவித்துள்ளார்.


இதேவேளை புத்தளம் உதைபந்தாட்ட சங்கத்தின் கீழ் நடைபெறும் நிர்வாக செயல்களில் இருந்தும் அவ் அணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,


புத்தளம் உதைபந்தாட்ட சங்கத்தின் புதிய நிர்வாகத்தினால் முதலாவதாக அணிக்கு ஒன்பது பேர் கொண்ட சுற்றுத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டு ஜூன் மாதம் 21ம் திகதி கற்பிட்டி அல்-அக்சா மைதானத்தில் நடாத்தப்பட்டது. 


இதன் போது இடம்பெற்ற அசம்பாவித சம்பவம் தொடர்பாக, சங்கத்தின் நிறைவேற்று குழு கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடல் நடைபெற்றது.


நிறைவேற்று குழு உறுப்பினர்கள் நேரில் சம்பவத்தை பார்வையிட்டதையும் , சம்பந்தப்பட்ட வீடியோ ஆதாரங்களையும் மற்றும் நடுவரின் ரிப்போர்ட் இவைகள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஆய்வில், அல் - அஷ்ரக் அணியில் விளையாடிய 10 வீரர்களும் , அணியின் தலைவர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் ட்ரிபிள் செவன் அணி வீரர்களை தாக்கியுள்ளனர் என்பது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனை அடிப்படையாகக் கொண்டே லீக் நிறைவேற்று குழுவால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال