JobVibe.lk - Sri Lanka Job Portal

அரசாங்கத்தின் 2025 தொடக்கம் 2030 வரையிலான ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டம்.

எம்.யூ.எம்.சனூன்

"செழிப்பான நாடு, அழகான வாழ்க்கை" என்ற தொனிப்பொருளில் அரசாங்கத்தின் 2025 தொடக்கம் 2030 வரையிலான 05 வருட கால ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டம் புத்தளம் நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்த அங்குரார்ப்பண நிகழ்வானது அண்மையில் (26) புத்தளம் பெரிய பள்ளி குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவு, 07ம் வட்டாரம், இபுனு பதூதா வீதியில் அமைந்திருக்கும் லகூன் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாநகர சபை மேயர் எம்.எப்.எம். ரின்ஷாத் அகமட், கௌரவ அதிதியாக பிரதி மேயர் நுஸ்கி நிசார் மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி அலுவலர் எம்.ஜீ.எம்.ஜனூன், கிராம சேவையாளர் எச்.ஆர்.ஜிப்ரி, சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரி முஹம்மது பைரூஸ், லகூன் சனசமூக நிலைய தலைவர் இல்ஹாம் இக்பால் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பெரிய பள்ளி குடியிருப்பு சமூக சேவையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டமானது இந்த நாட்டில் ஒவ்வொரு ஊர்களிலும், ஒவ்வொரு வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


குறித்த பிரதேசங்களில் வசதியும் மக்களின் பிரச்சினைகளை அந்தந்த வட்டாரங்களுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து மக்களை ஒரு இடத்திற்கு ஒன்று திரட்டி ஐந்து வருடத்திற்கான மக்களின் பிரச்சினைகளை மக்களிடமே கேட்டறிந்து அந்தப் பிரச்சினைகளை முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்று வகைப்படுத்தி மக்கள் மத்தியில் கேட்றிந்து அந்த தகவலை அரசாங்கத்திடம் ஒப்படைத்து அரசாங்கம் ஒவ்வொரு பிரச்சினைகளையும் அவசரமாக செய்து தருவதே நோக்கமாகும்.


இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் எம்.எப்.எம்.ரின்சாத் அஹ்மத்,  புத்தளம் நகரில் எதிர்காலத்தில் தான் மேற்கொள்ளவுள்ள துரித அபிவிருத்திகள் தொடர்பாக அங்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال