JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஸெய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

எம்.யூ.எம்.சனூன்

அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் ஸெய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் பல்வேறு விடயங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.


"செயல்களை முன்னெடுப்போம்,    பொறுப்புடன் செயற்படுவோம்" எனும் மகுட வாசகங்களோடு இத்திட்டம் துரிதமாக செயல்படுத்தப்பட்ட தோடு விழிப்புணர்வு வீடியோக்களை காட்சிப்படுத்தல் போன்ற திட்டங்கள் வகுப்பு ரீதியாக கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டன.


கிளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் தொடர்பாக காலைக் கூட்டம் மற்றும் மார்க்க ரீதியான சொற்பொழிவுகள் மூலமாக மாணவர்களுக்கு தெளிவாக விளக்கமளிக்கப்பட்டன.


இத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுக்கும் இந்த செயற்திட்டத்தின் இறுதி நகர்வாக விழிப்பூட்டும் வாசகங்களை கொண்ட பதாகைகள் மாணவர்களால் உருவாக்கப்பட்டு,  மாணவர்கள் பாடசாலையை சூழவுள்ள பாதையில் ஊர்வலமாக (25) அழைத்து செல்லப்பட்டனர்.    

        

பாடசாலை அதிபர் எச்.யூ.எம்.எஹியாவின் ஆலோசனையின் பேரில், பிரதி அதிபர் ஏ.ஜே.எப்.சாபினாத் மற்றும் உதவி அதிபர் எஸ்.ஐ.எல்.முஸம்மில் ஆகியோரின் வழிகாட்டலில் ஒழுங்கு பிரகாரம் அரசாங்கத்தின் இந்த செயற்திட்டம் செய்னப் பாடசாலையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال