JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் மாணவர்கள் பொது நூலகத்துக்கு விஜயம்.

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் தரம் 07 தொடக்கம் தரம் 09 வரைக்குமான மாணவர்கள் வியாழக்கிழமை காலை (05) புத்தளம் மாநகர சபை பொது நூலகத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.


மாணவர்களையும் அவர்களோடு வழிகாட்டியாக வந்த ஆசிரியர்களையும்  பிரதம நூலகர் கே.எம். நிஷாத் உள்ளிட்ட நூலக அதிகாரிகள் குழுவினர் அன்போடு வரவேற்றனர்.


இதன் போது அவர்களுக்கு  நூலகத்தின் சிறுவர் பகுதி, நூல் இரவல் பிரிவு, உசாத்துணை பகுதியின் சேவைகள் மற்றும்  நூலக தகவல் சாதனங்கள் தொடர்பாக பிரதம நூலகரினால் விளக்கமளிக்கப்பட்டதோடு நூலக தகவல் சாதனங்களில் இருந்து பெறக்கூடிய தகவல்கள் தொடர்பாகவும்  விளக்கமளிக்கப்பட்டன.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال