JobVibe.lk - Sri Lanka Job Portal

பாராளுமன்ற உறுப்பினர்களின் தர வரிசையில் தொடர்ந்து முன்னேறும் நிசாம் காரியப்பர்.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் செயற்றிறன் மற்றும் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்படுத்தும் Manthri.lk மாதாந்த மதிபீட்டறிக்கையின் பிரகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் 17 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னரான  தனது மதிப்பீட்டறிக்கையிலேயே 225 பாராளுமன்ற உறுப்பினர்களிடையே நிசாம் காரியப்பர் அவர்களை 17வது இடத்திற்கு உயர்த்தியுள்ளது.


இதற்கு முன்னர் அவர் 24வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், அவர் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் தொடர்ந்தும் முதலாவது இடத்தை தக்கவைத்து வருகிறார்.


அவ்வாறே கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் தரவரிசையில் சாணக்கியன் ராசமாணிக்கம் அவர்களுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தையும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ரவூப் ஹக்கீம் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தையும் நிசாம் காரியப்பர் எம்.பி பெற்றுள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال