JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் நாவக்காடு பகுதியில் விபத்து இருவர் பலி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் நாவக்காடு பகுதியில் சனிக்கிழமை (28) அதிகாலை பாரிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.


இது பற்றி மேலும் தெரியவருவதாவது பாலாவியிலிருந்து தலவில் தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்த சிறிய மினி பஸ்ஸை அதே திசையில் உர மூட்டைகள் ஏற்றி வந்து கொண்டிருந்த பெரிய கென்டர் ரக வாகனம் பின்னால் வந்து மோதியதில் பஸ்ஸில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்தோடு பஸ்ஸில் இருந்த மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகி புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.


இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال