JobVibe.lk - Sri Lanka Job Portal

தலவில் மகோற்ஷவ திருவிழா தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி  தலவில் புனித அன்னம்மால் தேவாலய மகோற்ஷவ திருவிழா அடுத்த மாதம் (ஜூலை)நடைபெற உள்ளது இது தொடர்பான உயர் மட்ட  கலந்துரையாடல் ஒன்று தலவில் பகுதியில் நடைபெற்றது. 


இதில் புத்தளம் மாவட்ட செயலாளர்,  புத்தளம் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர்,  கற்பிட்டி பிரதேச செயலாளர், கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளர், கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


வருடாந்தம் நடாத்தப்படும் தலவில் மகோற்ஷவ திருவிழாவிற்கு கற்பிட்டி பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் சகல ஏற்பாடுகளையும் இம்முறையும் எவ்வித குறைபாடுமின்றி செய்து தரப்படும் என சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال