JobVibe.lk - Sri Lanka Job Portal

நிந்தவூர்

எல்லோரும் நினைப்பது கட்சியின் அதிகாரம் தலைவரிடம்தான் உள்ளதென்று. அது உண்மைதான் தலைவரிடம்தான் உள்ளது. ஆனால் அதிகாரத்தை உள்ளூர் அரசியலில் தலைவரால் பிரயோகிக்க முடியாது. 


அவ்வாறு அதிகாரத்தை பிரயோகிக்க முற்பட்டால் கட்சிக்குள் குழப்பங்களும், பிரச்சினைகளும் அதிகரிக்கும். உள்கட்சி பூசல் அதிகரித்தால், எதிரி வென்றுவிடுவான். கட்சி பலயீனமடைந்துவிடும். 


இந்த நடைமுறை உண்மையை கூறினால், நான் தலைவருக்கு வக்காலத்து வாங்குவதாக சிலர் கூறுகின்றனர். இது அவர்களது மனோநிலையின் வெளிப்பாடு. 


தலைவரினால் அதிகாரத்தினை பிரயோகிக்க முடியாதென்பதனை நிந்தவூர் பிரதேச சபைக்கு வேட்பாளர் தெரிவில் காணக்கூடியதாக இருந்தது. தலைவர் விரும்பிய ஒருவரைக்கூட வேட்பாளராக நிறுத்துவதற்கு நிந்தவூரின் உள்ளூர் அதிகாரம் அனுமதிக்கவில்லையென்று அங்குள்ள கட்சி போராளிகள் கூறுகின்றனர்.   


இதன் விரக்தியின் காரணமாவே முஸ்லிம் காங்கிரசின் பல போராளிகள் இந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை எதிர்த்து SJP யில் போட்டியிட்டனர். அடுத்தகட்ட அரசியல் வளர்ச்சிக்கு அங்கு இடமில்லை. இதனால்தான் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் திட்டமிட்டு ஓரம்கட்டப்பட்டார். 


நிந்தவூரில் செல்வாக்குள்ள பல பிரமுகர்கள் முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடுவதற்கு முற்பட்டிருந்தும், அவர்கள் எவரும் கண்டுகொள்ளப்படவில்லை. அங்கு குடும்ப ஆதிக்கம் மேலோங்கியுள்ளதாக கூறுகின்றார்கள்.  


சரியோ பிழையோ ஒவ்வொரு ஊரிலும் முஸ்லிம் காங்கிரசுக்கு மத்திய குழு உள்ளது. ஆனால் ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலியின் மரணத்துக்கு பின்பு நிந்தவூரில் மத்தியகுழு இல்லை. அதாவது கட்சிக் கட்டமைப்பு இல்லை.   


நிந்தவூர் அரசியலில் மேட்டுக்குடி வாசனை உள்ளது. இதனை நன்றாக கூர்ந்து அவதானித்தால் புரியும். அதனால்தான் பாமர மக்கள் பலர் தாஹிர் எம்பிக்கு ஆதரவாக உள்ளனர்.


தேர்தலுக்கு முன்பு வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான சந்திப்பு ஒலுவில் கிரீன் வில்லாவில் நடைபெற்றபோது மாவட்டத்தின் அனைத்து ஊரவர்களும் அங்கு சென்றனர். ஆனால் நிந்தவூரவர்கள் மாத்திரம் அங்கு செல்லவில்லை. கட்சியின் செயலாளர் வேட்புமனு பத்திரத்தில் கையொப்பம் இடும்வரைக்கும் நிந்தவூர் பிரதேச சபையில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் யாரென்பது எவருக்கும் தெரியாது. 


தொடரும்..........


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال