Breaking News

புத்தளம் பீனிக்ஸ் சர்வதேச பாடசாலையின் மாணவர்கள் பொது நூலகத்துக்கு விஜயம்.

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் போல்ஸ் வீதியில் அமைந்துள்ள பீனிக்ஸ் சர்வதேச பாடசாலையின் மாணவர்கள் புத்தளம் பொது நூலகத்துக்கு வெள்ளிக்கிழமை (09) காலை விஜயம் செய்தனர்.


தமது ஆசிரியர்கள் சகிதமாக நூலகத்துக்கு விஜயம் செய்த தரம் 03 தொடக்கம் தரம் 09 வரையான மாணவர்களை பிரதம நூலகர் கே.எம்.நிஸாத் உள்ளிட்ட கடமையில் இருந்த அதிகாரிகள் வரவேற்றனர்.


பீனிக்ஸ் சர்வதேச பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்  நூலகத்தின் சிறுவர் பகுதி, இரவல் பிரிவு, உசாத்துணை பிரிவுகளின் சேவைகள் மற்றும் நூலக வளங்கள் தொடர்பாகவும் பிரதம நூலகரினால் விளக்கமளிக்கப்பட்டன.


வருகை தந்த மாணவர்கள் அனைவரும் அன்றைய தினம் நூலக அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.







No comments