JobVibe.lk - Sri Lanka Job Portal

பொத்துவில்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களை இரண்டு தடவைகள் கொழும்பில் சந்தித்தார். 


இது நடைபெற்றது உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இரு தினங்களுக்கு முன்பாகும். 


முஷரப்பை முஸ்லிம் காங்கிரசில் இணைத்துக்கொள்வதற்கு தலைவர் சம்மதித்ததுடன், இது பற்றி பொத்துவில் மத்தியகுழு அமைப்பாளர் வாசித்துடன் கலந்தாலோசித்ததுடன், பொத்துவில் மத்தியகுழுவும் இதற்கு சம்மதித்தது.  


இறுதியில் ஒன்பது முஸ்லிம் வட்டாரங்களைக் கொண்ட பொத்துவில் பிரதேசத்தில் வேட்பாளர்களுக்கான வட்டாரங்களை பங்கிடுவதில் முரண்பாடு ஏற்பட்டது. 


அதாவது முஷரப் தரப்பினர் ஆறு வட்டாரங்களை கோரினர். ஆனால் கட்சிக்காக இதுவரை காலமும் பாடுபட்ட போராளிகளை திருப்திப்படுத்த வேண்டி உள்ளதனால் ஆறு வட்டார கோரிக்கையை நிராகரித்ததுடன், முஷரப் தரப்புக்கு மூன்று வட்டாரங்களை வழங்குவதற்கு மத்தியகுழு உடன்பட்டது. 


ஆனால் அதனை முஷரப் தரப்பு ஏற்கவில்லை. அதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததுடன், தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டு தேர்தல் முடிந்ததன் பின்பு முஸ்லிம் காங்கிரசில் இணைந்து செயற்படுவதாக முஷரப் தரப்பு கூறியது. 


இங்கே நான் கூறுவது என்னவென்றால் இரு தரப்பும் இன்னும் சற்று விட்டுக் கொடுத்திருந்தால் ஒன்றாக போட்டியிட்டு எவருடைய ஆதரவுமின்றி தனியாக ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். 


தொடரும்.......... 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال