JobVibe.lk - Sri Lanka Job Portal

கசப்பான உண்மை

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து முஸ்லிம் கட்சிகளிலும் பிரகாசிகின்ற பிரதான அரசியல் பிரமுகர்கள் பெரும்பாலும் முஸ்லிம் காங்கிரசில் அரசியல் அடையாளம் பெற்றவர்கள்.  


நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ACMC க்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தவர்களில் நிந்தவூர், சம்மாந்துறை, கிண்ணியா போன்ற பிரதேசங்களில் முறையே தாஹிர் எம்பி, மாஹிர், ஹில்மி மஹ்ரூப் ஆகியோர்களாகும்.   


இந்த மூவரும் முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகி தற்போது பயணிக்கின்ற ACMC யின் வெற்றிக்காக உழைகின்றார்கள் என்பதைவிட, நிந்தவூர், சம்மாந்துறை, கிண்ணியா ஆகிய உள்ளூராட்சி சபைகளில் முஸ்லிம் காங்கிரசின் தோல்விக்கான பங்காளிகளாக இருந்தார்கள் என்று கூறலாம்.


இந்த மூவரும் முஸ்லிம் காங்கிரசில் இருந்து ஏன் வெளியேறினார்கள் ? மு.கா தலைவருடன் ஏதாவது இவர்களுக்கு முரண்பாடுகள் இருந்ததா என்று ஆராய்ந்தால் அவ்வாறு தலைவருடன் எந்தவித முரண்பாடுகளும் இல்லை. 


ஆனால் இவர்கள் முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேறியதற்கு அல்லது வெளியேற்றப்பட்டதற்கு அந்தந்த ஊர்களில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களின் குத்து வெட்டுக்களே காரணம் என்று கூறப்படுகின்றது. 


இதனை இன்னும் கூறுவதென்றால் மக்கள் அபிமானால் உள்ள இவர்களை ACMC நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றது. ஆனால் இவர்களை முஸ்லிம் காங்கிரசினால் பயன்படுத்த தெரியவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும். 


தொடரும்........


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال