JobVibe.lk - Sri Lanka Job Portal

அனுர குமார திஸானாயகவின் வெற்றியை புத்தளம் மக்கள் கேக் கொடுத்து கொண்டாடினார்கள்

அரசியல் கலாச்சாரத்தில் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெலை செய்யும் தூய தேசத்திற்கான இயக்கத்திற்கு “நாட்டில் இருக்கும் பெரும்பான்மையான மக்களின் சிந்தனையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம்” என்பது கொண்டாடப்படவேண்டிய விடயமாக பார்க்கப்பட்டிருக்கிறது.


ஊழல்வாதிகளை ஆதரிக்காமல், அநியாயக்காரர்களை அனுமதிக்காமல், அதிகாரத்தின் உச்சியில் இருந்து மக்களை அடிமையாக்கும் நாடகத்திற்கு இடம் கொடுக்காமல், பணத்தினால் எதையும் செய்திடலாம் என்று என்னும் முட்டால்களுக்கு ஆட்சியை கொடுக்காமல், நேர்மையாகவும், நீதியாகவும், தெளிவான கொள்கையோடும் பயணித்த அனுர குமார திஸானாயக அவர்களை மக்கள் வெல்ல வைத்திருப்பது அவ்வியக்கத்திற்கு புதிய புத்துணர்ச்சியை தந்திருக்கின்றது.


இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் முகமாக புத்தளத்தில் பொது மக்களுக்கு வீதியில் கேக் வழங்கி மகிழ்ச்சியை பரப்பி இருக்கின்றார்கள் தூய தேசத்திற்கான இயக்கத்தினர். இந்த நகர்வினை ”அனுர குமார வெற்றி பெறப்போகின்றார்” என்பதை அறிந்த பிற்பாடு அவரின் கட்சியில் இணைவதற்காகவோ, அல்லது அடுத்த தேர்தலில் அவர்களின் கட்சியில் வாக்கு கேற்பதற்காகவோ இந்த நகர்வு முன்னெடுக்கப்படவில்லை என்பதை மிகத்தெளிவாக அக்கட்சியின் தலைவர் இஷாம் மரிக்கார் தெரிவித்தார்.


தூய தேசத்திற்கான இயக்கத்திற்கும் NPP கட்சிக்கும் எந்த உறவும் கிடையாது என்பதை கூரியதோடு, தூய தேசத்திற்கான இயக்கம் மக்களின் சிந்தனை மாற்றத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டது என்பதை, நம்மை போன்று அரசியல் களத்தில் போராடுபவர்களுக்கு மாத்திரமே உணர்ந்துகொள்ள முடியும் என்பதையும் கட்சியின் தலைவர் இஷாம் மரிக்கார் நம் ஊடகத்திற்கு தெரிவித்தார்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال