JobVibe.lk - Sri Lanka Job Portal

சாய்ந்தமருதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து இன்று மாபெரும் பிரசார பொதுக்கூட்டம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெற்றிக்கான மாபெரும் தேர்தல் பிரசார கூட்டம் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பௌசி மைதானத்தில் இன்று (11) புதன்கிழமை மாலை 03.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.


ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் கல்முனை தொகுதியின் அதிகாரமளிக்கப்பட்ட முகவரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம். ஜெமீலின் ஏற்பாட்டில், பொத்துவில் தொகுதி அதிகாரமளிக்கப்பட்ட முகவரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் சம்மாந்துறை தொகுதி அதிகாரமளிக்கப்பட்ட முகவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோரின் ஒத்துழைப்புடன்

"தீர்வே விடிவு ரணிலே நம் தெரிவு" "வாருங்கள் பலமாவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இம்மாபெரும் மக்கள் பேரணியில், ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.


கௌரவ மற்றும் விசேட அதிதிகளாக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்வர்.


இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال