JobVibe.lk - Sri Lanka Job Portal

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் கல்வி அபிவிருத்திக்காக நிதி அன்பளிப்பு!.

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி க.பொ.த. (சா/த) மாணவர்களின் மேலதிக வகுப்புகளுக்காக 50,000/= ரூபா நிதி நேற்று (10)  அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


இந்நிதி குவைத் - கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மணவர் சங்கத்தினால் நிதி சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிதியினை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எம்.ஏ.எம். சர்ஜுன் பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களிடம் பணத்திற்கான மாதிரி காசோலையை வழங்கி வைத்தார்.


இந்நிதியினை வழங்கிய குவைத் - கடையாமோட்டை பழைய மாணவர் சங்கத்திற்கு பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கல்வி அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் ஆகியோர் சார்பாக தாம் நன்றி தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர்   தெரிவித்தார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال