JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி உச்சமுனை தீவு பகுதியில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் இருவர் கைது

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி உச்சமுனை தீவு பகுதியில் வைத்து சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட உலர்ந்த மஞ்சள் உறைகளுடன் இருவர் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர்  தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட இருவரும் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த  22 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும் சந்தேக நபர்களிடம் இருந்து 749 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் 17 உறைகளிலும் அதற்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் இன்ஜின் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறான சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் கற்பிட்டி கடற்பரப்பில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் இதனை கட்டுப்படுத்தும் முகமாக கடற்படையினரால் தொடர்ந்து சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும் அவ்வாறான சுற்றிவளைப்பில் போதே இச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال