JobVibe.lk - Sri Lanka Job Portal

ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட ஸ்மார்ட் ஊடக குழுவின் ஒன்றுகூடல் - பிரதம அதிதி ஐ.ம.ச தலைவரின் பாரியார் ஜலனி பிரேமதாச

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட ஸ்மார்ட் ஊடக குழுவின் ஒன்றுகூடல் செவ்வாய்க்கிழமை (30) சிலாபம் பாஇன் கடற்கரை விடுதியில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச கலந்து கொண்டார். அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி முன்னாள் பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விக்டர் என்டனி , முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நகர சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் பிரதேச அமைப்பாளர், மகளிர் அமைப்பு தலைவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


தற்போதைய சமூக ஊடகங்களில் பெறும் பங்காளர்களாக சேவையாற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக குழு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு எவ்வாறு கடமையாற்ற வேண்டும் அதன் மூலம் கட்சி அடைய உள்ள வெற்றி என்பன பற்றிய தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال