(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் , புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
புத்தளத்தின் கவிஞர் அஷ்ஃபா அஷ்ரஃப் அலியின் முதலாவது கன்னி வெளியீடான முதல் மழைத்துளிகள் மரபு இலக்கண கவிதை நூலின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை(02) பிற்பகல் 4.30 மணிக்கு புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் புத்தளம் செய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலையின் ஆசிரியர் எச்.எம் மில்ஹான் தலைமையில் நடைபெற உள்ளது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் எம்.ஐ.எம் றிபாத், கௌரவ அதிதிகளாக புத்தளம் கல்வி வலய ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர் கலாபூஷணம் எம்.ஏ.எம்.எம் ஜவாத் மரைக்கார், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸ்டம் ஏ.சன்ஹீர், மற்றும் ஓய்வு நிலை ஆசிரியர் ஆலோசகர் ஏ.டி.எம் நிஜாம் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
