JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் சீனடிக்கலையில் பிரகாசிப்பு.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

குருநாகல் தெலியாகொன்ன ஹிஸ்புல்லா மத்திய கல்லுரியில் (29) இடம்பெற்ற மாகாண மட்ட சீனடிக்கலை போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. 


சீனடிக்கலை போட்டியில் புத்தளம் சாஹிராவும்  பங்குபற்ற வேண்டுமென்று கல்லூரியின் அதிபர் ஐ.ஏ.நஜீம் உறுதியாக நின்று எல்லா சந்தர்ப்பங்களிலும் ஆர்வமூட்டி ஆலோசனை வழங்கி இருந்தார்.


நான்கு நாட்களுக்குள் தன்னை மிகவும் அர்ப்பணித்து மாணவர்களுக்கு பயிற்சிகளையும், ஏனைய பாடசாலைகள் அறிந்திராத பல நுட்பங்களையும் அறிமுப்படுத்தி ஆசிரியர் எம்.ஏ.எம்.சுபியான் மாணவர்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றார்.


இறுதிவரை பங்களிப்புச் செய்த ஆசிரியை இஸட்.ஏ.கமருன்னிசா, பாடசாலை முஸ்லிம் மஜ்லிஸ், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பெற்றார்களுக்கும், அத்துடன் பாடசாலையின் முகாமைத்துவக் குழு, ஏனைய சகல ஆசிரியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் அனைவருக்கும் அதிபர்  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்.






Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال