JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் ரேஸ் ஞாயிற்றுக்கிழமை

(கற்பிட்டி எம்.ஏச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி கே.ஆர்.சீ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் மோட்டார் சைக்கிள் ரேஸ் மற்றும் விளையாட்டு விழா எதிர்வரும் 2024/07/07 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கற்பிட்டி தேத்தாவாடி ரேஸ் மைதானத்தில் இடம்பெற உள்ளதாக ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.


ஹஜ் பெருநாளைக்கு முந்திய தினங்களில் பெய்த தொடர் மழை காரணமாக தேத்தாவாடி ரேஸ் மைதானம் புணரமைப்பு செய்யமுடியாத நிலை ஏற்பட்டதாகவும் தற்போது  காலநிலை ரேஸ் வைப்பதற்கு ஏற்றாற் போல் காணப்படுவதனால்  மைதானத்தின் புணரமைப்பு வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் எதிர்வரும் 07 ம் திகதி சனிக்கிழமை ரேஸ் வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கே.ஆர்.சீ அமைப்பின் தலைவர் ஜே.எம் தாரீக் தெரிவித்துள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال