JobVibe.lk - Sri Lanka Job Portal

அபாபீல் உதவும் கரங்களின் ஏற்பாட்டில் புத்தளம் பாலாவி மல்லிகாபுரம் கிராமத்தில் இடம்பெற்ற இரு வேறு நிகழ்வுகள்

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

அபாபீல் உதவும் கரங்களின் ஏற்பாட்டில் புத்தளம் பாலாவி  மல்லிகாபுரம் கிராமத்தில் இரு வேறு நிகழ்வுகள் (30) சிறப்பாக நடந்தேறின.


அபாபீல் உதவும் கரங்கள் அலுவலக திறப்பு விழா மற்றும் புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம் மற்றும் புத்தளம் அப்துல் மஜீத் அகடமின் பணிப்பாளரும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் பொதுச் செயலாளருமான அஷ்ஷெய்க் எச். அப்துல் நாசர் (ரஹ்மானி) அவர்களுக்கான கௌரவிப்பு ஆகிய இரு நிகழ்வுகளே நடந்தேறின.


அஷ்ஷெய்க் எச். அப்துல் நாசர் (ரஹ்மானி), அபாபீல் உதவும் கரங்கள் அமைப்புக்கு நல்கிய சேவைகளையும், யாழ் முஸ்லிம்களுக்கு அவர் ஆற்றிய கல்வி நடவடிக்கைகளையும் குறிப்பாக புத்தளம் கல்வி வளர்ச்சியில் அவர் ஆற்றியுள்ள பங்களிப்பையும் நினைவு கூர்ந்து இதன் போது அவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


அபாபீல் உதவும் கரங்களின் தலைவர் தேசமான்ய எம்.ஏ.சீ.எம். அமீன், பொதுச் செயலாளர் ஆசிரியர் எச். அமீர் அலி,

பொருளாளர் ஏ.எல்.ஹமாஸி, உப பொருளாளர் எம்.ஜீ. அஸ்மின், சமய விவகாரங்கள் மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளரான  அஷ்ஷெய்க் ஏ.எம்.எச்.மலிக் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال