JobVibe.lk - Sri Lanka Job Portal

விரிவுரையாளரும், ஓய்வு பெற்ற அதிபருமான பெலஜியா அபுல் ஹுதா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

இலங்கை திறந்த பல்கலைக்கழக புத்தளம் கற்கை நிலையத்தின் வருகைத்தரு விரிவுரையாளரும், புத்தளம் கற்கை நிலைய இணைப்பாளரும், ஓய்வு பெற்ற அதிபருமான பெலஜியா அபுல் ஹுதா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் புத்தளம் மாவட்ட மாணவர்களுக்காக 20 வருடங்களாக ஆற்றிய கல்விச் சேவைக்காக, புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


கல்வி அபிவிருத்தி மன்றத்தின் (EDF) தலைவரும், ஓய்வு பெற்ற சுங்கத்திணைக்கள அதிகாரியுமான எஸ்.எல்.மன்சூர், மன்றத்தின் செயலாளரும், சுங்கத்திணைக்கள அதிகாரியுமான சட்டத்தரணி எம்.யூ.எம். முன்சீர் மற்றும் புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகாவித்தியாலய பிரதி அதிபர் எம்.என்.எம். நஸ்ரியா ஆகியோரினால் இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال