JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியின் தில்லையூர், தேத்தாவாடி கிராமங்களுக்குச் செல்லும் பிரதான பாதை முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.

( கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி நகரிலிருந்து தில்லையூர், தேத்தாவாடி ஆகிய கிராமங்களுக்கும் உல்லாச பயணிகள் சுற்றுலா விடுதிகளுக்கும் செல்லும் பிரதான பாதை முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. 


கற்பிட்டியில் கடந்த இரண்டு தினங்கள் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மேற்படி பாதை முற்றாக நீரில் மூழ்கி உள்ளது. இதன் காரணமாக தில்லையூர் கிராமத்தில் உள்ள சுமார் 35 குடும்பங்கள் மற்றும் தேத்தாவாடி கிராமத்தில் உள்ள சுமார் 40 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தமது  அன்றாட தேவைகளுக்காக தில்லையூர், தேத்தாவாடி கிராம வாசிகளும் சுற்றுலா விடுதிகளில் உள்ள உல்லாச பயணிகளும் கற்பிட்டி நகருக்கு பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறான வெள்ள பெருக்குக்கான பிரதான காரணியாக இருப்பது ஓடையின் நீர் மட்ட அதிகரிப்பின் போது அந்த நீரை கடலுக்கு பாய்ச்சுவதற்கான ஒழுங்கான சொலுசு அமைக்கப்படாமையே என தில்லையூர் மீனவ சங்க நிர்வாகம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال