JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை..!

 ரஸீன் ரஸ்மின்

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் (21), நாளை மறுதினமும் 22) விடுமுறை வழங்குமாறு வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் உத்தரவிட்டுள்ளார்.


நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பாடசாலைகள் உட்பட பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.


இதனை கவனத்திற்கொண்ட மாகாண ஆளுநர் , புத்தளம் மாவட்டச் செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதம செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்றைய தினம் (20 ) புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டன.


எனினும், அசாதாரண நிலை தொடர்வதால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (21) செவ்வாய்க்கிழமையும், நாளைமறுதினம் (22) புதன்கிழமையும் விடுமுறையை வழங்கி மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال