JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜம்மியத்துல் உலமா புத்தளம் கிளையினால் சமைத்த உணவு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் நகர எல்லையில் பல இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளையினால் நேற்று (19) மஸ்ஜிதுல் அக்ஸா (இல்லியாஸ் வத்தை) மஸ்ஜிதுல் அல் அமீன் (இருவது வீடு)  மஸ்ஜிதுல் குபா (குபா பகுதி) மஸ்ஜிதுஸ் ஸலாம் மற்றும் கடையாகுளம் பகுதிகளில் உள்ள 250 குடும்பங்களுக்கு சமைத்த  இரவு உணவுகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.


ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளையின் சகல  உலமாக்களும் ஒவ்வொரு வீடாக சென்று அவர்களின் நிலமைகளை கேட்டரிந்து கொண்டதுடன் சமைத்த உணவு பொதிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது .

















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال