JobVibe.lk - Sri Lanka Job Portal

கழிவு முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்

(கற்பிட்டி எம்.எச்.எம்  சியாஜ்)

கற்பிட்டி பிரதேசத்தில் நீண்ட நாட்களாக நிரந்தர தீர்வுகள் இன்றி காணப்படும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மங்கள ராமநாயக்க தலைமையில் கற்பிட்டி பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் இன்று (06) இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கழிவு முகாமைத்துவம் பற்றிய முழுமையான விளக்கம் வடமேல் மாகாண கழிவு முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். ஏ மாரசிங்க வினால் வழங்கப்பட்டது. 

" பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தீ இட்டு எரிப்பதில் இருந்து விளகி மீள் சுழற்சி முறையினை நடைமுறைப்படுத்தல் " என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.


மேற்படி கலந்துரையாடலில் கற்பிட்டி பிரதேச சபையின் முன்னால் உப தலைவர், உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள், மத ஸ்தானங்களின் பரிபாலன சபை உறுப்பினர்கள், மீனவ சங்கத் தலைவர்கள், சமூக சேவை ஆர்வலர்கள்,  அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர்கள், கல்விப்  பணிமனையின் அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال