(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளத்தின் மூத்த உலமாவும், சிறந்த கல்விமானும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்ட முன்னாள் செயலாளருமான அஷ்ஷெய்க் M.H. ஹனஸ்மொஹீதீன் (நளீமி) அவர்களின் மறைவுச் செய்தி எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்ட செயலாளராக நீண்ட காலம் பணிபுரிந்த அன்னாரது பணிகள் என்றும் மறக்க முடியாதவை : நன்றியுடன் நினைவுகூரத்தக்கவை.
ஆழ்ந்த சிந்தனையும், சமூகப்பற்றும், துணிச்சலாக தீர்மானமெடுக்கும் ஆற்றலும், அர்ப்பணமும் கொண்ட அன்னாரது பணிகள் புத்தளம் மாவட்ட ஜம்இய்யாவுக்கு பலம் சேர்த்ததை நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.
சமய, சன்மார்க்க, சமூக கல்வி பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட அன்னாரது பணிகள் எமக்கான சிறந்த முன்மாதிரிகளாகும். அன்னாரது மறைவு தொடர்பில் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும், கவலையையும், பிரார்த்தனையையும் சமர்ப்பிக்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் தவறுகளை மன்னித்து அருள் செய்து, அவரது பணிகளை கபூல் செய்து மன்னறையை சுவனப்பூங்காவாக்கி, உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்கி அருள்வானாக!
அஷ்ஷெய்க். M.P. அப்துர் ரஷீத் (காஸிமி)
செயலாளர்
புத்தளம் மாவட்டம்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


