JobVibe.lk - Sri Lanka Job Portal

பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை விருத்தி "களப்பயணம்"

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் அன்சாரி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின், ஆசிரியர் வாண்மை விருத்திக் களப்பயணம் அண்மையில் (12) இடம்பெற்றது.

குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னோடி பாடசாலைகளான சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை, வெல்பொதுவெவ  அல் இல்மியா மகா வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளையும் தரிசிப்பதாக இந்த களப்பயணம் அமைந்திருந்தன. 

பாடசாலை அதிபர் எம்.என்.எம் நஸ்ரின் தலைமையில், பாடசாலை ஆசிரியர்கள் பலரும் இந்த களப்பயணத்தில் இணைந்து கொண்டனர்.

இதன் மூலம் ஆசிரியர்கள், கற்றல் நேரடி அனுபவங்களை பெற்றுக் கொண்டதோடு தமது கற்பித்தலை மேம்படுத்துவதற்கும், இன்னும் பல அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள  சந்தர்ப்பமாக அமைந்திருந்தது.

இந்த நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கிய வலயக்கல்விப் பணிமனைக்கும், மாகாண கல்வி பணிமனைக்கும், முன்னோடி பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை பாடசாலை அதிபர் எம்.என்.எம் நஸ்ரின் தெரிவித்துள்ளார்.








Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال