JobVibe.lk - Sri Lanka Job Portal

சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஏற்பாடு செய்த 73 வது வருடாந்த மீலாத் விழா நிகழ்வு மற்றும் பரிசளிப்பு விழா.

எம்.யூ.எம்.சனூன்

சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஏற்பாடு செய்த  73 வது வருடாந்த மீலாத் விழா நிகழ்வு மற்றும் பரிசளிப்பு விழா என்பன கொழும்பு லில்லி அவென்யூவில் அமைந்துள்ள ஏ.ஏ.எம். மர்லீன் மண்டபத்தில் சனிக்கிழமை (14) மாலை மிக விமரிசையாக இடம்பெற்றது.

ஹிப்ளு, பேச்சு, மல்டிமீடியா சமர்ப்பிப்பு மற்றும் அரபு எழுத்தணி போட்டிகளில் வற்றி பெற்ற மாணவர்களுக்கு இதன்போது பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் தலைவர் அல்ஹாஜ் ஒமர் காமில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக இலங்கையிலுள்ள துருக்கி குடியரசின் தூதுவர் மேன்மை தங்கிய டொக்டர். செமிஹ் லுத்ஃபு துர்குட் மற்றும்  திருமதி லெய்லா துர்குட் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

அனைத்து மொழிகளிலும் பங்கேற்ற மொத்தம் 67 வெற்றியாளர்கள் தங்களது பரிசுகளைப் பெற்றனர்.

பேச்சுப் போட்டி வெற்றியாளர்கள், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மரியாதை செலுத்துதல் என்ற கருப்பொருளில் பார்வையாளர்களிடையே உரையாற்றினர். 

அவர்களில் சிங்களத்தில் போட்டியிட்ட செல்வி எம்.என்.எப். நுஷ்ஹா, ஆங்கிலத்தில் போட்டியிட்ட செல்வி க்னேய் அமீரா ஹமீத், மற்றும் தமிழில் போட்டியிட்ட நபீஸ் முபாரக் மற்றும் எம்.எஸ். மைமூனா ஆகியோர் அடங்குவர். 

சோனக இஸ்லாமிய கலாச்சார நிலைய இணைச் செயலாளர்கள் ஹனிபா இஷாக் மற்றும் ரிமாஸ் சலீம், இணைப் பொருளாளர்கள் பரீன் கௌஸ் மற்றும் ஸியாம் காமில், மகளிர் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நடுவர்கள் என பலரும்  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

தஃவா மற்றும் மதக் குழுவின் தலைவர் எஸ். முஹம்மது ஷாஸ்லி நன்றியுரை வழங்கினார்.












































Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال