எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மணல் குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 09 சி இல் கல்வி பயிலும் மாணவி பைசல் பாத்திமா சபா, தனது மாணவர் பராயத்திலேயே துணிந்து எழுதியுள்ள "நிமிர்" கதைப்புத்தக வெளியீடு மிக விமரிசையாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூல் இந்த நூல் வெளியீட்டு விழா 16ஆம் திகதி திங்கட்கிழமை காலை 08.30 இலிருந்து 11 மணி வரைக்கும் புத்தளம் மணல் குன்று முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இடம் பெற இருக்கின்றது.
"எழுத்தே என் ஆயுதம்" என்ற எண்ணத்தோடு தனது மாணவர் பராயத்திலேயே நூல் ஒன்றை எழுதி வெளியிட வேண்டும் என்று இம்மாணவி கண்ட கனவு இதன் மூலம் நனவாகின்றது.
இம்மாணவியின் நூல் வெளியீட்டை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க பாடசாலை நிர்வாகம் முன்வந்துள்ளது.


