JobVibe.lk - Sri Lanka Job Portal

சர்வதேச சகக் கற்றல் பயிலரங்கில், புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் எம்.என்.எம். நுஸ்கி கலந்து கொள்ள உள்ளார்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளத்தை பிரதிநிதித்துவப்படுத்தி "நிலையான அபிவிருத்திக்கான உட்கட்டமைப்புச் சொத்து முகாமைத்துவம்" எனும் சர்வதேச சகக் கற்றல் பயிலரங்கில்புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் எம்.என்.எம். நுஸ்கி கலந்து கொள்ள உள்ளார்.

இந்த பயிலரங்கு நவம்பர் மாதம் 19 ம் திகதியிலிருந்து 21ம் திகதி வரை இந்தியா டெஹ்ராடூன் ஹோட்டல் எல்.பி. விலாஸில் இடம்பெறவுள்ளது.

சி.பி.பி.ஜி.ஜி. திட்டமிடல் திணைக்களம், உத்தரகண்ட் அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வானது ஐ.நா. DESA வுடன் இணைந்து இடம்பெறவுள்ளது.





Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال