JobVibe.lk - Sri Lanka Job Portal

கட்டாரில் நடைபெற்ற "இன்டர் சஹீரியன்ஸ் புட்சால் சீசன் 06" போட்டித்தொடரில் சம்பியன் பட்டத்தை சஹீரியன்ஸ் சைகோன் அணி தனதாக்கிக் கொண்டது.

எம்.யூ.எம்.சனூன்

ஓல்ட் சஹீரியன்ஸ் கட்டார் ஏற்பாட்டில் கட்டார், அல் மமூரா, கேம்பிரிட்ஜ்  பாடசாலை மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற (13) "இன்டர் சஹீரியன்ஸ் புட்சால் சீசன் 06" போட்டித்தொடரில் சம்பியன் பட்டத்தை சஹீரியன்ஸ் சைகோன் அணி தனதாக்கிக் கொண்டது.

தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் சஹீரியன்ஸ் சைகோன் மற்றும் சஹீரியன்ஸ் டியூட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஹீரியன்ஸ் சைகோன் அணி 05 : 02 என்ற கோல் கணக்கில் சஹீரியன்ஸ் டியூட்ஸ் அணியை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

கூடுதலான கோல்களை செலுத்தியவருக்கான தனி நபர் விருதினை சஹீரியன்ஸ் சைகோன் அணியின் வீரர் எம்.எஸ்.எம்.நப்ரி பெற்றுக்கொண்டார்.

தொடர் முழுவதும் தனது அபாரமான கோல் அடிக்கும் திறமையை வெளிப்படுத்தி அதிக கோல்களை நப்ரி பெற்றிருந்தார். 

சஹீரியன்ஸ் ஸைகோன் அணியின் கோல் காப்பாளர்  பஷாரத் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை வென்றார்.














Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال