எம்.யூ.எம்.சனூன்
இஸ்லாமிய கலை கலாச்சாரப் போட்டியில், தேசிய மட்ட சீனடிக்கலை நிகழ்வில் முதலிடத்தைப் பெற்று புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த சீனடிக்கலை நிகழ்வில் தொடர்ச்சியாகத் தமது திறமையை நிரூபித்து வரும் இக்கல்லூரி மாணவர்கள், 2024ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தையும், 2025ஆம் ஆண்டு முதலிடத்தையும் பெற்றதுடன், இம்முறையும் தேசிய மட்டத்தில் முதலிடத்தைத் தக்கவைத்து மகத்தான சாதனையைப் படைத்துள்ளனர்.
இச்சாதனையைப் பெற்ற மாணவர்களுக்குக் கல்லூரியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவிக்கப்படுகின்றன.
இவ்வெற்றிக்காக மாணவர்களை அர்ப்பணிப்புடன் வழிநடத்தி, பயிற்சியளித்து தேசிய மட்டப் போட்டிக்கு அழைத்துச் சென்ற பிரதான பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் எம்.ஏ.எம்.சுபியானுக்கும், ஏனைய நிகழ்ச்சிகளிலும் மாணவர்களைப் பயிற்றுவித்து ஊக்கப்படுத்திப் பங்களிப்புச் செய்த கே.எம்.எம்.அஸ்ஹர், எம்.ஏ.வை.ருஷ்தா,
மற்றும் எச்.முஜீபா ஆகிய ஆசிரியர்களுக்கும் கல்லூரியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், இச்சாதனைக்குத் தேவையான ஒத்துழைப்புகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய கல்லூரியின் அதிபர் ஐ.ஏ.நஜீம், இணைப்பாடவிதான பிரதி அதிபர் என்.நளீம் ஆகியோருக்கும் விசேட நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் திறமை, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கல்லூரியின் ஆதரவு ஆகியவற்றின் சங்கமமாக அமைந்துள்ள இவ்வெற்றி புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் மற்றுமொரு பெருமை மிகு சாதனையாகும்.

