JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ரிஷாத் பதியுதீன் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் ஏ.ஆர்.ஹம்தான் கிராஅத் போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்.

எம்.யூ.எம்.சனூன்

தேசிய மட்டத்திலான முஸ்லிம் கலாச்சாரப் போட்டியின் பிரிவு - 1 ஆண்கள் கிராஅத் ஓதுதல் போட்டியில் மூன்றாவது இடத்தை வடமேல் மாகாணத்தில் புத்தளம் கல்வி வலய  ரிஷாத் பதியுதீன் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் ஏ.ஆர்.ஹம்தான் பெற்றுக் கொண்டார். 

மாகாண மட்டங்களில் முதலாம் இடத்தை பெற்ற 09 மாணவர்களுக்கான தேசிய மட்ட கிராஅத் ஓதுதல் போட்டி கொழும்பு சாஹிரா கல்லூரியில் சனிக்கிழமை (14) நடைபெற்ற போதே இந்த மாணவர் 03 ம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

வெற்றியை பெற்றுத்தந்த மாணவருக்கு பாடசாலை சமூகம் சார்பாகவும், மாகாணம் மற்றும் கல்வி வலயம் சார்பாகவும் பாடசாலை அதிபர் ஏ.ஏ.எம்.பௌசீன் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். 

இவர் புத்தளம் முல்லை ஸ்கீம் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் அப்துல் ரஹ்மான் மற்றும் சுமையா ஆகியோரின் மகனாவார்.








Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال