JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட தூதுக்குழுவினர் தெற்கு கடற்படை கட்டளையின் பிரதி தளபதியைச் சந்தித்தனர்

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அமெரிக்க பசுபிக் பிராந்திய விண்வெளிப் படையின் (U.S. Space Forces Pacific – SPACEPAC) பாதுகாப்பு ஒத்துழைப்புப் பிரதானியான Lieutenant Colonel Shumpei Fujimura உள்ளிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் இராஜதந்திரப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், உத்தியோகபூர்வ சந்திப்பொன்றிற்காக  புதன்கிழமை (2026 ஒக்டோபர் 21) தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், அக்கட்டளையின் பிரதி தளபதியான கொமடோர் அருண வீரசிங்ஹவைச் சந்தித்தனர்.

இதன்போது, விண்வெளி களம் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துதல், இராணுவ உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு தொடர்பாக இருதரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

 மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.








Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال