JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்யாலயத்தில் புலமையாளர்கள் கௌரவிப்பு...!.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்யாலயத்தில்  புலமையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (20) பாடசாலையின் அதிபர் ஐ.என்.எம் லாஹிர் தலைமையில் இடம்பெற்றது 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம். ஐ. எம். நௌஷாத் கலந்து கொண்டு சிறப்பித்துடன் கௌரவ அதிதிகளாக முன்னாள் ஓய்வு பெற்ற அதிபர் எம் எச் எம் ஹபீஸ் மற்றும் கொத்தான்தீவு ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் கே. எம். இம்தியாஸ் உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்கள், பழைய மாணவியர் சங்க செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்கள, பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து  சிறப்பித்தனர்.

இதேவளை இந்நகழ்வில் புலமைப்பரிசில் பரீடசையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அநிவித்து நினைவுச் சின்னம் வழங்கி பரிசுப் பொருடகள் வழங்கியதோடு, மேலும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேற்படி புலமையாளர்கள் கௌரவிப்பு நிகழ்விற்கான நினைவுச்சின்னங்களை எஸ்.எம் நியாஸ்தீன்  ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க விருதோடையைச் சேர்ந்த எம்.பஷான் மற்றும் பாடசாலையின் பழைய மாணவிகளும் வழங்கியதுடன் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடுகளை தரம் 05 மாணவர்களின் பெற்றோர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

































Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال