JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி கனமூலையில் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் நோக்கில் வடிகால் சுத்திகரிப்பு சிரமதானப் பணி

(எம். யூ. எம். சனூன்)

முந்தல் பிரதேச செயலகப் பிரிவின் கனமூலை தெற்கு கிராம சேவகர் பிரிவில், Clean Sri Lanka திட்டத்தின் 'அத்தம' மாதாந்த வேலைத்திட்டத்தின் கீழ், கனமூலை தெற்கு அலையடி பிரதான அலை சுத்தம் செய்யும் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும்  மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைக் குறைத்தல், நீர் வடிந்தோடும் வழிகளைச் சீரமைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணுதல் ஆகிய நோக்கங்களுடன் இச்சிரமதானப் பணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் முந்தல் பிரதேச Clean Sri Lanka ஒருங்கிணைப்பாளர் தோழர் ஏ. ஜீ. இருசால், கனமூலை தெற்கு பிரஜா சக்தி தலைவர் தோழர் எம். எப். ரமீஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் தோழர் ரிபாஸ் மற்றும் முந்தல் பிரதேச செயலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அத்துடன், இலங்கை கடற்படையினர், அல்-அன்வார் விளையாட்டுக் கழக வீரர்கள் மற்றும் பிரஜா சக்தி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இச்சிரமதானப் பணியில் தன்னார்வமாகப் பங்கேற்று தமது பங்களிப்பை வழங்கினர்.

கிராம மட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனர்த்த இடர் குறைப்பு மற்றும் பொதுச் சுகாதார மேம்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் அரச நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கூட்டுப் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில் இத்தகைய சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




























Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال