எம்.எம்.எம்.சனூன்
மூதூர் ஜே.எம்.ஐ. பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், நீர்கொழும்பு பெரிய முல்லையை பிறப்பிடமாகவும், மாபோல வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட "கவிமாமணி" நிஸ்வத் நிஸ்பர் எச்.தீன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சமூக சேவையாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு மூதூரில் இடம்பெற்ற போதே இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நிறுவனத்தின் பணிப்பாளர் ஜுனைத் எம். இஹ்ஸான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 200 க்கும் மேற்பட்டோர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வு பல் ஆளுமைகள் கலந்து சிறப்பித்த சிறப்பு நிகழ்வாக அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் "கவிமாமணி" நிஸ்வத் நிஸ்பர் எச்.தீன், சமூகப் பணித் துறையில் அளப்பரிய சேவைகளை வழங்கியமைக்காக "Field of social work" என்ற விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்
இவர் லக்ஸ்டோ மீடியா, கவிமலர்கள், பைந்தமிழ்ச் சங்கம், தினச்சுடர் மீடியாக்களின் நீர்கொழும்பு ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றுவதோடு, இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பெண்கள் ஒருங்கிணைப்பாளராக செயலாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
