திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில், மூதூர் JMI நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் கௌரவிப்பு விழாவில், பேருவளையைச் சேர்ந்த பாத்திமா நுஹா நிஸார் அவர்களுக்கு “இளம் எழுத்தாளர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வின்போது, அவருக்கான விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இவ்விழா ஒக்டோபர் 24ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இதன் முதல் நாளில் புத்தகக் கண்காட்சியும், இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கும் வைபவமும் இடம்பெற்றன.
குறித்த புத்தகக் கண்காட்சியில் பல்வேறு புத்தக நிறுவனங்கள் பங்கேற்றதுடன், அனுபவம் வாய்ந்த மூத்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் எழுத்தாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
JMI நிறுவனத்தின் தலைவர் இஹ்ஷான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பேருவளையைச் சேர்ந்த பாத்திமா நுஹா நிஸாருக்கு “இளம் எழுத்தாளர்” விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



